சினிமா செய்திகள்
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் தசரா படத்தின் புதிய போஸ்டர்!
சினிமா செய்திகள்

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'தசரா' படத்தின் புதிய போஸ்டர்!

தினத்தந்தி
|
24 Feb 2023 7:33 PM IST

நானி இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகராக வலம் வரும் நானி, தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'தசரா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நானி இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



மேலும் செய்திகள்